இலங்கை சப்ரகமுவ மாகாணத்தில் கத்தோலிக்க திருச்சபை இரத்தினபுரி றௌமன் கத்தோலிக்க மறைமாவட்டம்.

இரத்தினபுரி றௌமன் கத்தோலிக்க மறை மாவட்டமானது இலங்கைத் தீவில் தென்மத்திய பகுதியில் உள்ள சப்ரகமுவ மாகாணம் முழுவதையூம் உள்ளடக்கியூள்ளது. இந்த மாகாணமானது இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களை போன்று காணப்படுகின்றது. பழங்காலத்தில் இலங்கையில் மிகவூம் அரிதாக பேசப்பட்ட தனித்துவம் நிறைந்த வேட்டைக்கார பழங்குடி இனம் ‘சப்ர’ என்று அழைக்கப்பட்டது. இம் மாகாணமானது இரத்தினத்தொழிலுக்கு மிகவூம் பிரசித்தி வாய்ந்ததாக காணப்பட்டது. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டமானது இரத்தின தொழிலோடு நெல் பழவகை உற்பத்திக்கும்இ இறப்பர் மற்றும் தேயிலை பயிர் செய்கைக்கும் இம் மாகாணம் பிரசித்தி பெற்றதாகும். இம் மாகாணத்திலே சிங்கராச வனம் உடவளவைஇ தேசிய ப+ங்காஇ போவத் அல்ல நீர்வீழ்ச்சிஇ கித்துள்கலஇ ஆதாம் மலை சிகரம் மற்றும் பல்வேறு இடங்கள் உள்ளதால் சுற்றுல்லா பயணிகளை கவர்ந்த ஒரு மாகாணமாக உள்ளது. இம்மாகாணத்தில் தலைநகரமாக இரத்தினபுரி காணப்படுகின்றது. இலங்கையிலேயே இரத்தினக்கற்கள் அதிகமாக காணப்படும் இடமாக இருப்பதால் இரத்தினபுரி என்று அழைக்கப்பட்டது. இதன்அடிப்படையிலேயே இரத்தினபுரி மறைமாவட்டம் என்று அழைக்கப்பட்டு புனித பேதுரு பவூல் ஆலயம் இம் மறைமாவட்டத்தின் பேராலயமாக உயர்த்தப்பட்டது. இம் மறைமாவட்டம் அன்னைமரியாளின் மாசில்லா திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



இரத்தினபுரியில் கத்தோலிக்கர்களின் வரலாறு

இரத்தினபுரியில் கத்தோலிக்கர்களின் வரலாறானது பதினேழாம் நூற்றாண்டின் போர்த்துக்கேயர் இரத்தினபுரியில் ஆட்சி செய்த வேளையில் வாழ்ந்த சில கத்தோலிக்க மக்களில் இருந்து ஆரம்பிக்கின்றது. பெரும்பாலானவா;கள் போத்துக்கேயர்களாகவூம் அவர்கள் உள்நாட்டு பகுதிகளில் திருமணம் செய்து வாழ்ந்தார்கள். இலங்கையின் திருத்தூதரான புனித யோசேவாஸ் அடிகள் தற்போது காணப்படும் புனித பேதுரு பவூல் பேராலயத்தில் தனது அப்போஸ்தலிக்க பணியை ஆற்றினார்.



மறைமாவட்ட வரலாறு

இரத்தினபுரி மறைமாவட்டமானதுஇ தற்போது புனிதராகப்பட்டிருக்கும் புனித இரண்டாம் அருள் சின்னப்பா; திருத்தந்தையாக இருந்த காலத்தில் அதாவது காh;த்திகை மாதம் இரண்டாம் நாள் 1995ம் ஆண்டு ஒரு தனி மறைமாவட்டமாக நிறுவப்பட்டது. இது காலி மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தற்போது கொழும்பு உயா;மறைமாட்ட கா;தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை 05.01.1996 அன்று இம் மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டார். அதிமேதகு மல்கம் றஞ்சித் ஆண்டகை மறைமாட்டத்தின் ஆயராக 05.01.1996 இல் இருந்து 01.10.2001 வரை பணியாற்றினார். ஆயர் அவர்கள் 01.10.2001 அன்று மாற்றலாகி உரோமாபுரியிலுள்ள மறைத்தூது பணியின் அவையில் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு ஒப்படைக்கப்பட்டது. திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் 29.01.2003 அன்று அதிமேதகு ஹ்றல்ட் அன்ரனி பெரேரா அவர்களை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயராக நியமிக்கும் வரை கிட்டத்தட்ட ஒருவருடமும் ஜந்து மாதங்களாக இம் மறைமாவட்டம் ஆயர் அற்ற மறைமாவட்டமாக காணப்பட்டது. அதிமேதகு மல்கம் றஞ்சித் ஆண்டகையை 18.03.2003 அன்று; அதிமேதகு ஹ்றல்ட அன்ரனி பெரேரா அவர்களை கொழும்பு புனித லூசியாஸ் பேராலயத்தில் ஆயராக திருப்பொழிவூ செய்ப்பட்டு 22.03.2003 அன்று இரத்தினபுரி புனித பேதுரு பவூல் பேராலய ஆயராக பதவியேற்றார்.பின்பு 18.03.2005 அன்று காலி மறைமாவாட்டத்திற்கு மாவட்ட ஆயராக மாற்றமாகி சென்றார். அதைதொடர்ந்து திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அவர்கள் கண்டி மறைமாவட்ட குருவாகிய அருட்பணி ஜவன் திலக் ஜெயசிந்த்ரை அவர்களை 20.01.2006 அன்று இரத்தினபுரி மறைமாவட்டத்திற்கு தேர்வூ நிலை ஆயராக நியமிக்கப்பட்டார். இரத்தினபுரி மறைமாவட்டத்திற்கு தேர்வூ நிலை ஆயராக இருந்த இவர் ஆயராக திருப்பொழிவூ செய்வதற்கு முன்னர் 06.07.2006 அன்று தனது பதவியை இராஜனாம செய்தார். மேலும் ஆசிவாதப்பர் சபையை சேர்ந்த அருட்திரு கிளிட்ஸ் சந்ரசிறி பெரேரா அவர்கள் திருத்தந்தை 16ம் ஆசீவாதப்பர் அவர்களினால் 04.05.2007 அன்று; ஆயராக நியமிக்கப்பட்டார். இவர் 11.07.2007 அன்று பேரருட்திரு வியானி பா;னாந்து ஆண்டகையினால் உரோமாபுரியிலுள்ள பன்னிரண்டு திருத்தூதர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்தில் ஆயராக திருப்பபொழிவூ செய்யப்பட்டார். பின்பு 20.07.2007 அன்று புனித பேதுரு பவூல் பேராலத்தின் இரத்தினபுரி மறைமாவட்ட ஆயராக பதவியை ஏற்றுக்கொண்டார்.

புதிய மறைமாவட்ட உருவாகுதல்: 02.11.1995 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்.
முதல் ஆயர்: பேரருட்திரு மல்கம் றஞ்சித
மறைமாவட்டத்தின் கத்தோலிக்க மக்களின் தொகை: 19286 (1.0மூ 2012ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் படி)
மறைமாவட்டத்தின் பாதுகாவலர் : மாசில்லாத இருதய மாதா
மறைமாவட்ட பேராலயம்: புனித பேதுரு பவூல் ஆலயம்
மறைமாவட்டத்தின் சிறிய குருமடம்: மாசில்லாத இருதய மாதா சிறிய குருமடம் கேகாலை
ஆயர் இல்லம்: மாதொலஇஅவிசாவல
பங்குகளின் எண்ணிக்கை: 22 பங்குகள்
துறவற இல்லங்களின் எண்ணிக்கை: ஆண்- 4 பெண்- 15
மொழி: சிங்களம்இ தமிழ

மறைமாவட்ட எல்லை

மறைமாவட்ட எல்லையானது 4.918.2 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது. இது இலங்கையின் இரத்தினபுரி மற்றும் கேகாலை என்னும் இரண்டு மாவட்டங்ளை உள்ளடக்கியூள்ளது அதாவது தென்மேல் மாகாணமாகிய சப்ரகமுவ மாகாணம் முழுவதையூம் உள்ளடக்கியூள்ளது. இரத்தினபுரி மறைமாவட்டமானது வடக்கே குருநாகல் மறைமாவட்டத்தையூம்இ கிழக்கே பதுளை மறைமாவட்டத்தையூம்இ மேற்கே கொழும்பு மறைமாவட்டத்தையூம்இ தெற்கே காலி மறைமாவட்டத்தையூம்இ உள்ளடக்கியது.

காலநிலை

இரத்தினபுரி மறைமாவட்டமானது நீர்வளம் நிறைந்த பகுதி என்று அழைக்கப்படும். இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இம் மறைமாவட்டமானது வைகாசி தொடக்கம் புரட்டாசி வரையிலும் தென்மேல் பருவ மழையினால் வளம் பெறுகின்றது. இங்கு சராசரியாக 24 டிக்கிரி செல்சியஸ் வெப்பநிலையூம்இ அதிகளவிலான ஈரப்பதனும் காணப்படும்.

பொருளாதாரம்

பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த அதாவது தேயிலைஇ இறப்பர்இ கொக்கோ போன்ற மூலப்பொருட்களை மையமாக கொண்ட தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர். இந்த மாகாணம் அதிகமாக தேயிலையையூம்இ இறப்பர்களையூம் கொண்டு காணப்படுகின்றது. இங்கு வளரும் தேயிலை ஒரு நடுத்தர வகையை சார்ந்தவை. இரத்தினபுரி மாவட்டத்தில் வாழுகின்ற மக்கள் பெரும்பாலும் இரத்தினம் அகழ்வதையூம் அதை வணிகம் செய்வதிலுமே தங்கி வாழ்கின்றார்கள். மாணிக்கம்இ நிலக்கற்கள்இ இன்னும் பல்வேறுபட்ட பெறுமதி மிக்க கற்கள் இங்கு கிடைக்கப்பெறும்.

மக்கள் தொகை

2012ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள மொத்த சனத்தொகையின் அளவூ 1இ928இ625 ஆகும் இரத்தினபுரி மாவட்டத்தில் 1இ088இ007 ஆகவூம் கேகாலை மாவட்டத்தில் 242இ648 ஆகவூம் உள்ளது. இனத்தவரின் அடிப்படையில் பெரும்பான்மையினரான சிங்களவர் 8609மூ ஆகவூம் இலங்கை தமிழர் 2.3மூ ஆகவூம் இந்;தியத்தமிழர் 6.9மூ ஆகவூம் இலங்கை சக இனத்தவர் 4.2மூ ஆகவூம் காணப்படுகின்றனர். சப்ரகமுவ மாகாணத்தை பொறுத்த மட்டில் பெரும்பான்மையாக பௌத்த சமயத்தவர் (85.7மூ) உள்ளவாக ஏனையவர்களில் இந்துக்கள் 8.1மூ உம் முஸ்லிம் மக்கள் 4.4மூ றௌமன்கத்தோலிக்கம் மற்றும் மதத்தவர் 1.7மூ ஆகவூம் காணப்படுகின்றனர்.