இரக்கத்திற்கான விசேட யூபிலி ஆண்டு என்பது

இறை இரக்கத்தின் விழாவாகிய 2015-04-11 தினத்தன்று தற்போதைய திருத்தந்தையால் இறை இரக்கத்தின் ஆண்டு உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ராயேல் வரலாற்றில் யூபிலி ஆண்டு என்பது இறைவனுக்கு விசேடமான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளும் உன்னதமான சடங்கு சம்பிரதாயங்களுக்கு இடமளிக்கும் காலப்பகுதியாகும்.

வாழ்க்கையில் உன்னதமான மாற்றத்தைக் கொண்டு வருவதே யூபிலி ஆண்டில் மேற்கொள்ளப்படும் சகல செயற்பாடுகளினதும் உண்மையான உள்நோக்கமாகும். மன்னிப்பு எனும் கொடையை அருளுவதே இந்த யூபிலி ஆண்டில் செயல் படுத்தப்படும் சம்பிரதாயங்களிலே முக்கியமானதொன்றாகும். இதன் அடிப்படையில் சிறப்பாக சிறை கைதிகளின் சுதந்திரம்இ அடிமைகளின் விடுதலைஇ கடன் தொல்லையிலிருந்து விடுதலை அளிப்பதன் மூலமாக இறைவனின் மன்னிப்பையூம் அவரது எல்லையற்ற அன்பையூம் பகிந்தளிப்பதே பிரதான கருப்பொருளாகும். (லேவி 25ஃ8-13) மனிதனில் திருப்பு முனையை ஏற்படுத்தும் சடங்குகளே யூபிலி வருடமொன்றில் நிகழ்த்தப்படுகிறது.

யூபிலி ஆண்டிற்கான கால எல்லை

2015 மார்கழி 08 திகதி கன்னிமரியாளின் அமல உற்பவ பெருவிழாவோடு ஆரம்பமாகிஇ 2016 காh த்திகை 20 கிறிஸ்து அரசர் பெருவிழாவோடு நிறைவடைகின்றது. யூபிலி ஆண்டின் தொடக்க நாளின் பிரதான விடயமாயிருப்பதுஇ இந்நாள் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவூ பெறும் நாளாகும். இத்தினத்திலே உரோமையிலுள்ள புனித பேதுரு பசிலிக்காவின் தூய கதவூ திறந்து வைக்கப்படும். இது இறைவனின் எல்லையற்ற அன்பின் ஊற்று பெருக்கெடுத்து வருவதன் அடையாளமாய் அமைகின்றது.

இரக்கத்தின் தூய கதவூ

இரக்கத்தின் தூய கதவூ என்பதுஇ இறை அன்பின் உன்னத அடையாளமாக கருதப்படுகின்றது. அந்த தூய கதவை திறந்து வைப்பதன் மூலம் பலவீனர்களாகிய மானிடர் இறை இரக்கத்தை அனுபவித்திடவூம்இ அதனை மற்றவர்களிடத்தில் கொண்டு செல்வதன் மூலம் திருச்சபைக்குள் புதிய காற்று வரவேண்டும்இ என்பதன் அடையாளமாக உலகில் உள்ள எல்லா மறைமாவட்ட பேராலயங்களிலும் மற்றும் திருத்தலங்களிலும் இரக்கத்தின் கதவூகள் திறந்து வைக்கப்படும். அதற்கமைய எமது மறைமாவட்டத்தின் இரத்தினபுரி பேராலயம்இ குடாகம லூர்து அன்னை திருத்தலம்இ தஞ்ஜன்தென்ன விண்ணேற்பு மாதா தேவாலயங்களின் தூய கதவூகள் திறந்து வைக்கப்படும். மார்கழி 08

இந்த யூபிலி ஆண்டின் கருப்பொருள

“இறை தந்தையைப் போல இரக்கமுள்ளராய் இருங்கள்” இம் முன்மாதிரிகையான கருப்பொருளின் அடித்தளமாய் இருப்பது (லூக் 6ஃ36). இவ்விதம் நம்மை அழைக்கும் இறைவனின் அளவூகடந்த அன்பை எவருமே வறையறையிட முடியாது. இந்த அன்பினை முன்மாதிரிகையாய் கொண்டுஇ நாம் வாழும் சூழலில் மானிட சமூக மேம்பாட்டினை கட்டியெழுப்புவதற்காக மற்றவர்களைத் தீர்ப்பிடாதுஇ தரம் குறைவாக எண்ணாதுஇ அன்பினால் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் அன்புள்ளம் கொண்டவர்களாய் வாழ்வோம்.

உத்தியோக பூர்வமாக பிரகடனம் படுத்துதல

இரக்கத்தின் ஆண்டை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதில் முன்நின்று செயற்பட்டவரான அருட்தந்தை மாகோ ஐ ருக்னித் அடிகளாரால்இ இது முதல் திருச்சபையின் அனுபவங்களை வெளிப்படுத்தி நிற்கின்றது. தீமையின் ஆதிக்கத்துள் அழிந்போகும் நபரைஇ இறைவன் தனது நல்லாயனின் இரக்கத்தைப் பொழிந்து பதில் கொடுக்கிறார். இது மனிதனால் விளங்கிக்கொள்ள முடியாத நிறைவான அன்பின் மறைபொருளாகும். இறைவனது மீட்புத் திட்டமானது மனுவூரு எடுத்தலின் மறைபொருளாகும். இறை மனித உறவானது மூவொரு கடவூளின் அன்பைப் போன்றது. இதன் எடுத்துக்காட்டாய் அமைவதுஇ ஆதாமை இறைவன் இரக்கத்தோடு நோக்கினார். அவ்வாறே ஆதாமும் இறைவனை அன்பு செய்தார். இம் மூவிதமான அடையாளங்களினதும் மையமாய் இருப்பது பாவத்தில் வீழ்ந்த மனிதனை பாவ இருளிலிருந்து மீட்டெடுத்தார் என்பதாகும். இதுவே இறைவார்த்தையின் ஒளியில் நற்செய்தியின் மையமாய் இருக்கின்றது.

இரக்கத்தின் ஆண்டில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இரக்கச் செயல்களாவன

உடலைச் சார்ந்த இரக்கச் செயல்கள
ஆன்மாவைச் சார்ந்த இரக்கச் செயல்கள்

உடலைச் சார்ந்த இரக்கச் செயல்கள

இறைவனின் இரக்கத்திற்கு அன்பே அடிப்படை என்பதால்இ சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள்இ அநாதைகளைகள் மட்டில் திருச்சiயானது அவதானத்தைச் செலுத்துகின்றது. இறை இரக்கத்தை அவர்கள் உணர்வதற்கும்இ இறைவனின் அளவற்ற அன்பினை சுவைப்பதற்குமான அனுபவத்தினைப் பெற்றிடஇ நாளாந்தம் அவர்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு சிறப்பான முறையில் பதிலளித்திடஇ

பசியாய் இருப்பவர்களுக்கு உணவளித்தல்
தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுத்தல
உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுத்தல்
உபசரித்தல
குணமளித்தல்
இறந்தவர்களை அடக்கம் செய்தல் (என்பன குறிப்பிடத் தக்கவை)

ஆன்மாவைச் சார்ந்த இரக்கச் செயல்கள்

ஒப்புரவூ அருட்சாதனத்தின் வழியாக வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இறைவனோடு உறவூ கொள்ளுதல். நம்பிக்கையின்மைஇ சந்தேகம் என்பவற்றை புறந்தள்ளி எம்மை புதுப்பித்துக் கொள்ளுதல் ஆகும். அத்தோடு அநாதைகளுக்கு அடைக்கலம் அளித்தல்இ வேதனையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளித்து தேற்றுதல்இ தவறு செய்பவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல்இ இறந்தவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுதல் என்பன ஆன்மாவைச் சார்ந்த இரக்கச் செயல்களாக கருதப்படுகின்றன.

இரக்கத்தின் ஆண்டில் பூரண பலன் என்பது

திருத்தந்தையால் பொதுவாக யூபிலி ஆண்டில் நடைமுறை படுத்தப்டும் இரக்கச் செயல்கள் முதல்நிலை படுத்தப்பட்டுள்ளன. எனவே இவ்வாண்டில் பூரண பலனைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாய் இருப்பவைஇ பாவசங்கீர்த்தனம் செய்தல்இ திருப்பலியில் கலந்துகொண்டு தேவநற்கருணை உட்கொள்ளுதல்இ செபவாழ்வூஇ திருயாத்திரைச் செல்லுதல் என்பனவாகும். திருச்சபையின் இவ்விதமான இரக்கச் செயல்களில் ஈடுபடும் போதுஇ செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுஇ குறித்த தண்டனையிலிருந்து விலக்கப்பட்டுஇ பூரண பலன்களைப் பெறுவதாக கருதப்படுகின்றது. இறைவனுக்காகத் திருச்சபையூம் அந்த பூரண பலன்களை அனுமதிக்கின்றது. இவ்விதம் பூரண பலன்களைப் பெறும் நபர் பாவம் அற்றவராகவூம் பூரண பலன்களைப்; பெற்றுக் கொள்ளுவதற்குமான தகுதியைப் பெறுகிறார். இறைவனின் இரக்கத்தோடும் அவரது ஆசீர்வாதத்தோடும் மனமாற்றத்தின் வழியாக பாவப் பிடியிலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொண்டவராய் ஆகிறார்.

இதனை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறைகளாவன

பாவசங்கீர்த்தனம் என்னும் அருட்சாதனத்தைப் பெற்றுக்கொள்ளுதல
திருப்பலியில் கலந்துகொண்டு தேவநற்கருணைப் பெறுதல
திருத்தந்தையின் கருத்துக்களுக்காக (1பர 1அருள் 1திரி)

இவ்விதமாக ஆன்மாவைச் சார்ந்த இரக்கச் செயல்களில் ஈடுபடும் நபர்இ இறந்தவர்களுக்காக மன்றாடும்போது அதற்கான பூரணபலனைப் பெற்றுக் கொள்கிறார். வாழும் ஒருவருக்காக மற்றொருவர் மன்றாடும்பொழுது அது பூரண பலனாய் அமையாது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் போது மாத்திரமே அது பூரண பலனைப் பெற்றுத் தருகின்றது.

எம் ஆண்டவராகிய இயேசுவேஇ

இறை தந்தையைப் போல் இரக்கம் உள்ளவராக வாழும்படி நீரே எமக்குக் கற்றுத் தருகின்றீர். அதேபோன்று என்னைக் காண்பவன் என் தந்தையைக் காண்பான் என்றும் கூறியிருக்கின்றீர். உமது திருமுகத்தைக் காட்டி எம்மை மீட்டருளும்.

உமது இரக்கம் நிறைந்த பார்வையினால் சக்கேயூவையூம்இ மத்தேயூவையூம் பணத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டதுபோல்இ விபரச்சாரப் பெண்இ மரிய மதலேனாள் போன்றௌர் உமது படைப்பிலே மகிழ்வைத் தேடியதுபோலஇ பேதுரு உம்மைக் மறுதலித்த பின் கண்ணீர் விட்டு அழுததுபோலஇ மனந்திரும்பிய கள்வனுக்கு வானக வீடு வாக்களிக்கப்பட்டது போல நாமும் மாறுவதற்கு “கடவூளுடைய கொடை எது என்பதை நீர் அறிந்திருந்தால்இ” என்று சமாரியப் பெண்ணுக்கு நீர் கூறிய வார்த்தையை நாங்களும் செவிமடுக்கச் செய்தருளும்.

காண முடியாத வானகத் தந்தையைக் காணக்கூடிய முகதரிசனமாக இருப்பவர் நீரே. சிறப்பாக மன்னிப்புஇ இரக்கம் போன்ற மேலான கொடைகளையூம் தன்னகத்தே கொண்டிருப்பவரே நாம் வாழும் திருச்சபை உம்மை காணக்கூடிய முகதரிசனமாக இருக்கச் செய்தருளும். அத் திருச்சபையின் கடவூள் உயிர்த்து மகிமைப்படுத்தப்பட்டவர் என்பதை உணர்ந்து உமது பணியாளர்கள் தமது பலவீனத்தின் மத்தியிலும் தவறுகளிலும் அறியாமையிலும் உமது இரக்கத்தையூம் அன்பையூம் சுவைக்கச் செய்தருளும். அவர்களை நாடிச் செல்வோர் இறைவனின் மன்னிப்பையூம்இ அன்பையூம் பெற்றிடச் செய்தருளும்.

உமது தூய ஆவியை அனுப்பி எங்கள் ஒவ்வொருவரையூம் அபிஷேகம் செய்து புனிதப் படுத்தியருளும். இதன் மூலம் நாம் கொண்டாடும் இரக்கத்தின் ஆண்டு கடவூளின் கருணையை வழங்கும் ஆண்டாகவூம்இ உமது திருச்சபை புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் எளியோருக்கு நற்செய்தியைக் கொண்டு செல்லவூம்இ அடிமைத்தனத்தின் சிறையில் வாழுவோருக்கு விடுதலை வாழ்வூ கிடைக்கும் என்பதையூம் அறிவித்துஇ பார்வையற்றௌருக்கு பார்வை அளித்திடவூம் செய்தருளும். இவை அனைத்தையூம் இரக்கத்தின் அன்னையாகி உமது தாய் மரியாளின் வேண்டுதலின் மூலம் பெற்றுத் தந்தருளும். இறைவனோடு என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவரும் தூய ஆவியூமாகிய ஆண்டவரே - ஆமென்.


Bishop Cletus Chandrasiri

Bishop Cletus Chandrasiri Perera O.S.B.


Upcoming Events

2018-06-23

One day workshop for the Sunday school teachers of Dehiowita, Maliboda and Gurugalla

2018-06-27

One day workshop for the Sunday school teachers of Ruwanwella, Yatiyanthota and Bulathkohupitiya

2018-07-06

6th to 7th of July: Seminar for Sunday school Teachers Exam I, II, III

2018-07-13

13th to 15th of July: Fifth Seminar for the Advanced Level Students in Sinhala and Tamil Medium

2018-07-15

15th of July: Last day to submit application form of Sunday School teachers

2018-07-21

21st of July: One day workshop for the Sunday school teachers of Dehigahapitiya Parish